பொதுவெளியில் நிர்வாண வீடியோ: சர்ச்சை நடிகை மீது அதிரடி நடவடிக்கை

பொதுவெளியில் நிர்வாண வீடியோ: சர்ச்சை நடிகை மீது அதிரடி நடவடிக்கை

பொதுவெளியில் நிர்வாண வீடியோ எடுத்த வழக்கில் பிரபல சர்ச்சை நடிகை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது இவர் வழக்கம். தனது காதலர் சாம் பாம்பேவை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பூனம் பாண்டே, கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். அங்கு இருவரும் திடீரென தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீஸில் புகார் அளித்தார் பூனம். பின்னர் இருவரும் சமாதானமாகினர்.

பூனம், சாம் பாம்பே
பூனம், சாம் பாம்பே

அங்கு கனாகோனா பகுதியில் உள்ள சபோலி அணை அருகே பொதுவெளியில் நிர்வாணமாக, பூனம் பாண்டே வீடியோ எடுத்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்தார். அந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுக்கு சொந்தமான இடத்தில் இப்படி வீடியோ எடுக்க இவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்று சரமாரி கேள்விகள் எழுந்தன.

மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததை அடுத்து பூனம் பாண்டேவும் அவர் கணவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 39 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக கனாகோனா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் கவாஸ் தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டேவும், சாம் பாம்பேவும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in