கோவா சர்வதேச திரைப்பட விழா: நவ. 20-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது!

கோவா சர்வதேச திரைப்பட விழா
கோவா சர்வதேச திரைப்பட விழா

54வது கோவா சர்வதேச திரைப்பட விழா நவ.20-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான திரைப்பட விழா வரும் நவ.20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் திரையிட 25 படங்கள் தேர்வாகியுள்ளன. பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் டிஎஸ் நாகபர்னா தலைமையிலான 12 ஜூரி உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் இந்திய படங்களை தேர்வு செய்துள்ளனர்.

விடுதலை திரைப்படத்தில் சூரி
விடுதலை திரைப்படத்தில் சூரி

அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி ஆகிய மொழிகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த திரைப்பட விழாவில் தமிழில் இருந்து மொத்தம் நான்கு படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் 'விடுதலை', ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீள நிற சூரியன்' ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2

அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்“ திரையிடப்படவுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி“ படமும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in