'எனக்குப் பாதுகாப்பு வழங்குங்கள் ': முதல்வரை சந்தித்து முறையிட்ட பிரபல நடிகை!

'எனக்குப் பாதுகாப்பு வழங்குங்கள் ': முதல்வரை சந்தித்து முறையிட்ட பிரபல நடிகை!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பாதுகாப்பு கோரினார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான அந்த நடிகை, 2017-ம் ஆண்டு நடிகர் திலீப்பால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை கொச்சி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை அந்த நடிகை சந்தித்து தனது நிலையை விளக்கினார். 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு கட்டாயம் உதவும் என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாக நடிகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து காவல்துறை ஆணையரை அழைத்து நடிகைக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in