“எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்!”

ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நடிகை ஷோபனா வேண்டுகோள்
“எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்!”
நடிகை ஷோபனா

அசுர வேகத்தில் பரவிவரும் கரோனா தொற்றால் நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானும் மிரட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “கரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட போதும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூட்டுவலி, குளிர், தொண்டை கரகரப்பு முதல்நாளில் அறிகுறிகளாக இருந்தன. பின்னர், ஒவ்வொரு நாளும் அவை குறைந்து வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொற்று வேகமாகப் பரவுவதை அது தடுக்கிறது என நம்புகிறேன். நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், உடனடியாகச் செலுத்திக்கொள்ளுங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். இந்த ஒமைக்ரானுடன் வைரஸ் தொற்று முடிவுக்கு வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்” என ஷோபனா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.