தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி: பிரபல பாடகி எச்சரிக்கை

தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி: பிரபல பாடகி எச்சரிக்கை
siddamanohar

தனது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக, பிரபல பாடகி எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ’ஜீவநதி’, தோழா படத்தில், டோர் நம்பர், சிவலிங்கா படத்தில் ரங்கு ரக்கர, சிவலிங்கா உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் கீதா மாதுரி. ஹைதராபாத்தை சேர்ந்த இவர், தெலுங்கில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத், தமன், கீரவாணி, மணி சர்மா, ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில், தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியில் பயன்படுத்தி, அமெரிக்க எண்ணில் இருந்து மர்மநபர்கள் சிலர் ஏமாற்று அரட்டையில் ஈடுபடுவதாகவும் பிரபலங்களின் நம்பரை கேட்பதாகவும் கூறியுள்ளார். அது தான் அல்ல, யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

பாடகியின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது. பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இப்படி மோசடியாக மர்மநபர்கள் செயல்பட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in