
நடிகை காயத்ரி மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார்.
தமிழில், ’18 வயசு’படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். ’நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ’பொன்மாலைப் பொழுது’, ’ரம்மி’, ’புரியாத புதிர்’, ’சூப்பர் டீலக்ஸ்’ உட்பட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இப்போது ’பாஹீரா’, ’டைட்டானிக் காதலும் கவுந்துபோகும்’, ’மாமனிதன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர், ’நா... தான் கேஸ் கொடு’ (Nnaa...Thaan Case Kodu) என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரதிஷ் பொடுவல் இயக்குகிறார். ’ஷெர்னி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராகேஷ் ஹரிதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். குஞ்சாகாபோபன் நாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு செருவாத்தூரில் நேற்று தொடங்கியுள்ளது.