ரீமேக் படத்தில் ஹீரோவை மாற்றினார் கௌதம் மேனன்: நடிக்கப்போவது யார் தெரியுமா?

ரீமேக் படத்தில் ஹீரோவை மாற்றினார் கௌதம் மேனன்: நடிக்கப்போவது யார் தெரியுமா?

தனது படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்த ஹீரோவை, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

’மாநாடு’ வெற்றியை அடுத்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இதை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை அடுத்து கவுதமுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் அவர்.

இந்தப் படத்தில் நடிகை ராதிகா, சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர்கள் சித்திக், நீரஜ் மாதவ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

ராம் பொத்தினேனி
ராம் பொத்தினேனி

செப்டம்பர் 15 ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதில் நாக சைதன்யாவை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கௌதமின், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் பொத்தினேனி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

ராம் பொத்தினேனி, லிங்குசாமி இயக்கியுள்ள ’தி வாரியர்’ படத்தில் இப்போது நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in