`லியோ’ படப்பிடிப்பை முடித்த கெளதம் வாசுதேவ் மேனன்?

`லியோ’ படப்பிடிப்பை முடித்த கெளதம் வாசுதேவ் மேனன்?
`லியோ’ படப்பிடிப்பை முடித்த கெளதம் வாசுதேவ் மேனன்?

மிஷ்கினை அடுத்து இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனனும் ‘லியோ’ படப்பிடிப்பை முடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் என பலரும் நடித்து வரக்கூடிய ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காஷ்மீரில் தற்போது நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் போர்ஷனை ‘லியோ’ படத்தில் முடித்து விட்டதாகவும் படத்தின் அனுபவம் குறித்தும் இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இப்போது கெளதம் வாசுதேவ் மேனனும் தன் போர்ஷனுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் காஷ்மீரில் இருந்து கெளதம் மேனன் சென்னை திரும்புவார் எனவும் ‘பத்துதல’ இசைவெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொள்ள இருக்கிறார். இதோடு ‘லியோ’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது எனவும் இதற்கடுத்த ஷெட்யூல் நடிகர் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத்துடனும் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in