வெப்சீரிஸில் இணையும் அதர்வா, மணிகண்டன், கவுதம் மேனன்!

வெப்சீரிஸில் இணையும் அதர்வா, மணிகண்டன், கவுதம் மேனன்!

நடிகர் அதர்வா, மணிகண்டன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் வெப்சீரிஸில் இணைந்து நடிக்கின்றனர்.

சசிகுமார், வேல ராமமூர்த்தி, நிகிலா விமல், சுஜா உட்பட பலர் நடித்த படம், ’கிடாரி’. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். தர்புகா சிவா இசை அமைத்திருந்தார். கவனிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாத் முருகேசன்.

மணிகண்டன்
மணிகண்டன்

இந்தப் படத்தை அடுத்து ’குயின்’ வெப்தொடரை, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து இயக்கினார். ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக கொண்டு உருவான இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றது. அடுத்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

பிரசாத் முருகேசன், கவுதம் வாசுதேவ் மேனன்
பிரசாத் முருகேசன், கவுதம் வாசுதேவ் மேனன்

இதற்கிடையே எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் அவர் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். க்ரைம் த்ரில்லர் தொடரான இதில், அதர்வா நாயகனாக நடிக்கிறார். அவருடன் ’ஜெய்பீம்’ மணிகண்டனும் நடிக்கிறார். இதில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.