விஜய் படத்தில் இணையும் கவுதம் மேனன்: ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் படத்தில் இணையும் கவுதம் மேனன்: ரசிகர்கள் உற்சாகம்!

கமல், சூர்யா, அஜித், சிம்பு, தனுஷ் எனத் தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய கவுதம் மேனன், இதுவரை ரஜினி, விஜய் இருவரையும் வைத்து எந்தப் படத்தையும் எடுக்கவில்லை. இந்நிலையில், விஜய் நடிக்கும் படம் ஒன்றில் கவுதம் மேனன் இணையவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

2012-ல் கவுதம் மேனன் இயக்கத்தில் ’யோஹன்: அத்தியாயம் ஒன்று’ எனும் திரைப்படத்தில் விஜய் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரமன லார்கோ வின்ச் கதாபாத்திரத்தைத் தழுவி அப்படம் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரைப் போலவே உருவாக்கியிருந்தார் கவுதம் மேனன்.

எனினும், படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பே படத்தின் மொத்த கதையையும் கவுதம் மேனன் தன்னிடத்தில் சொல்லாததால் அந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தில் கவுதம் மேனன் இணைந்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்கப் போகிறார்கள். ஏற்கனவே இந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகர் அர்ஜுன், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது கவுதம் மேனனும் இன்னொரு வில்லன் வேடத்தில் நடிக்க இப்படத்தில் இணைந்திருக்கிறார். விஜயுடன் இயக்குநராக இணைய முடியாத கவுதம் மேனன் இப்போது அவர் படத்தில் வில்லனாக இணையவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in