சிம்பு, கமல் படங்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் கௌதம் மேனன்

சிம்பு, கமல் படங்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் கௌதம் மேனன்

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், ‘இந்த கதைக்கு முன்பு நான் நடிகர் சிம்புவுடன் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். பிறகு சிம்புவுடன் வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் பணிபுரிய வேண்டும் என்று தோன்றியது. எழுத்தாளர் ஜெயமோகனுடன் எனக்கு தோன்றிய கதையை விவாதித்த பிறகு நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ரகுமானிடம் இந்த புதிய கதையை சொன்னேன்.

அவர் ஏற்கெனவே, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்திருந்தார். இந்த கதை கேட்டதும், இதற்கு புதிய பாடல்களை மீண்டும் இசையமைக்க ஒத்து கொண்டார். இரவு இரண்டு மணிக்கு கூட பாடல், இசை தோன்றினால் தொலைபேசியில் அழைப்பார். ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் உருவான போது இரவு 2.30. இந்த கதையில் ஆரம்பத்தில் காதலுக்கான இடம் இல்லாமல் இருந்தது.

ஆனால், எழுத்தாளர் ஜெயமோகனின் மனைவி என் படங்களின் காதல் குறித்து பேசியதும், ஜெயமோகன் என்னிடம் விவாதித்து கதையில் அதற்கான இடத்தையும் உருவாக்கினோம். காதலுக்காக மட்டும் கதாநாயகி பயன்படுத்தபடவில்லை. முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்’ என்றார்.

மேலும், " படத்தின் முதல் பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ‘Part1: The Kindling’ என்ற டேக்கோடு வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அடுத்த பாகம் இருக்கும் என்றும், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையும் எழுத்தாளர் ஜெயமோகனும் விவாதத்தில் இருக்கிறோம்" என்றும் கெளதம் வாசுதேவ் மேனன் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in