‘அன்புச்செல்வன்’ படக்குழுவினர் மீது கௌதம் மேனன் புகார்

‘அன்புச்செல்வன்’ படக்குழுவினர் மீது கௌதம் மேனன் புகார்
கௌதம் மேனன்

இயக்குநர் கவுதம் மேனன், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில், அவர் நடிப்பில் ‘அன்புச்செல்வன்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இதைப் பார்த்து ஷாக் ஆன கௌதம் மேனன், ‘அன்புச்செல்வன்’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் இந்த இயக்குநரை நான் இதற்கு முன்னர்பார்த்தது கூட இல்லை என்று ட்விட்டரில் தெரிவித்தார். இதையடுத்து ‘அன்புச்செல்வன்’ படக்குழுவினர் கௌதம் மேனன் நடித்த சில காட்சிகளை காணொலி தொகுப்பாக வெளியிட்டு, படத்தில் அவர் நடித்திருப்பது உண்மை என்றனர். திரைப்படத்தின் பெயர் ‘அன்புச்செல்வன்’ என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்குக் காரணம் என்றும் தெளிவுபடுத்தினர்.

இதையடுத்து. ‘அன்புச்செல்வன்’ படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஜெய்கணேஷ் இயக்கத்தில் ‘வினா’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, 2018-ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படப்பிடிப்பு பணிகள் நடக்கவில்லை. தற்போது, தயாரிப்பாளர் தரப்பில், வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே ‘அன்புச்செல்வன்' படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in