கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப் பாடல்

கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப் பாடல்

இந்தியா முழுவதும் தற்போது நவராத்திரி திருவிழா நடந்துவருகிறது. தெலங்கானா பகுதிகளில் இத்திருவிழாவை ‘பதுக்கம்மா’ என்ற பெயரில் கொண்டாடுவார்கள். இந்த 9 நாட்களில் தெலங்கானா பெண்கள், வீடுகளை விதவிதமான மலர்களால் அலங்கரித்து, தாங்களும் பூச்சூடி இறைவனை வழிபடுவார்கள்.

பூக்களைக் கொண்டு கொண்டாடப்படுவதால் தெலங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களைக் கொண்டு, இத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலங்கானாவின் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் பாரம்பரிய அடையாளமாகும்.

இந்த விழாவைப் பற்றிய தனிப் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி உள்ளார். ‘தெலங்கானா ஜகுர்தி’ என்ற அமைப்பின் சார்பில், எம்எல்சி கே.கவிதா இதைத் தயாரித்துள்ளார். இந்தப் பாடல் தற்போது, கௌதம் வாசுதேவ் மேனனின் யூடியூப் சேனலான ‘ஒன்றாக என்டர்டெய்ன்மென்ட்’-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Related Stories

No stories found.