திருட்டு இணையத்தில் வெளியானது சாய் பல்லவி நடித்த 'கார்கி’:படக்குழு அதிர்ச்சி

திருட்டு இணையத்தில் வெளியானது சாய் பல்லவி நடித்த 'கார்கி’:படக்குழு அதிர்ச்சி

நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ’கார்கி’ படம் திருட்டு இணையதளங்களில் இன்று லீக் ஆகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நிவின் பாலி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ’ரிச்சி’ படத்தை இயக்கியவர் கெளதம் ராமச்சந்திரன். இவர் இப்போது இயக்கியுள்ள படம், ’கார்கி’. இதில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி உள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணை தயாரிப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் இன்று (ஜுலை 15) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழில், சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்துள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தில், நடிகை சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள், இந்தப் படத்தையும் ஆன்லைனில் பதிவேற்றியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in