வீட்டில் கிடந்த கஞ்சா, போதைப் பொருட்கள்... நடிகை மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: போலீஸ் அதிர்ச்சி

வீட்டில் கிடந்த கஞ்சா, போதைப் பொருட்கள்... நடிகை மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: போலீஸ் அதிர்ச்சி

சடலமாக மீட்கப்பட்ட நடிகை வீட்டில் இருந்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷஹானா (20). மாடலான இவர், நகை கடை விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜன்னலில் தூக்குபோட்டு சடலமாகக் கிடந்தார் ஷஹானா. இதுகுறித்து கோழிக்கோடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷஹானா இறந்தது பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த அவர்கள், ஷஹானா சாவில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தனர். சஜாத் பணத்துக்காக ஷஹானாவை துன்புறுத்தியதாகக் கூறினர்.

ஷஹானாவின் தாயார் கூறும்போது, ``அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் 20-வது பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்திருந்தார்’' என்றார். போலீஸார் சஜாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சஜாத் வீட்டில் இருந்து கஞ்சா, எம்டிஎம்ஏ, எல்எஸ்டி போன்ற போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் உடல் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.