பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை வழக்கு: 'ஊ சொல்றியா மாமா’ பாடல் நடன இயக்குநருக்கு ஜாமீன்!

பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை வழக்கு: 'ஊ சொல்றியா மாமா’ பாடல் நடன இயக்குநருக்கு ஜாமீன்!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரபல நடன இயக்குநருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. சென்னையில் பிறந்த இவர், இந்தி சினிமாவின் முன்னணி நடன இயக்குநராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். ’புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடி ஹிட்டான ’ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கும் இவர்தான் நடனம் அமைத்திருந்தார். தமிழில், கோகுல் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரேயா நடித்த’ரவுத்திரம்’படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

35 வயது பெண் உதவி நடன இயக்குநர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது கடந்த 2020-ம் வருடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கூறி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்திருந்தார். இந்த வழக்கில் போலீஸார் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கணேஷ் ஆச்சார்யா கைது செய்யப்படவில்லை என்றாலும் தனக்கு ஜாமீன் கோரி மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in