ஹாட் அப்டேட்: விஜய் சேதுபதியின் மவுனப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

ஹாட் அப்டேட்: விஜய் சேதுபதியின் மவுனப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

விஜய் சேதுபதி நடிக்கும் ’காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப்படத்தில், பிரபல முன்னணி நடிகரும், நடிகையும் இணைந்துள்ளனர்.

வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்தில் இப்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, ’காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது மவுனப் படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ம் ஆண்டு வெளியான ‘பேசும்படம்’ தான், கடைசியாக வந்த மவுனப் படம்.

தற்போது மீண்டும் மவுனப் படம் ஒன்று உருவாகிறது. ‘காந்தி டாக்ஸ்’ என்ற இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் என்ற மராத்தி இயக்குநர் இயக்குகிறார்.

அதிதி ராவ் ஹைதாரி
அதிதி ராவ் ஹைதாரி

இதுபற்றிய அறிவிப்பை கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி, ’‘சில நேரங்களில் அமைதி, மிகுந்த சத்தத்தை தரும். ’காந்தி டாக்ஸ்’ எனக்கு புதிய ஆரம்பம் மற்றும் சவாலாக அமையும். உங்கள் அன்பும், ஆதரவும் என்றும் தேவை’’ என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். முன்னணி நடிகரான அரவிந்த் சாமியும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

``பல்வேறு சூழல்களில் வார்த்தைகளை விட, மவுனம் அதிகம் பேசுகிறது என்பார்கள். இந்த வாக்கியம் உண்மைதான் என்பதை இந்தப் படம் நிரூபிக்கும். உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில், சமூகத்தில் நடக்கும் முறிவுகளைப் பேசும் படமாக இருக்கும்'' என்று இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஜீ ஸ்டூடியோஸ் நிறுவன அதிகாரி ஷாரிக் படேல் கூறும்போது, ``மாற்றத்தைக் கொடுக்கிற, அதே நேரம் நம்பிக்கையூட்டும் படங்களை நாங்கள் தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ’காந்தி டாக்ஸ்’ நாங்கள் நம்புகிற அத்தகைய புதுமையான முயற்சியாக இருக்கும்’' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.