ஆஸ்கர் விருதுகள் - விருதாளர்கள் முழுப்பட்டியல்!

ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருது

95-வது ஆஸ்கர் விருதுகளில் 2 இந்திய படைப்புகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழான விருதுகளை சர்வதேச விருதாளர்கள் பெற்றனர். அவற்றின் முழுப்பட்டியலை இங்கே பார்க்கலாம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது அகடமி விருது வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து 3 படைப்புகள் போட்டியிட்ட நிலையில், 2 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை அவை வென்றன. ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. மேலும் ’தி எலிபண்ட் விஸ்பெரெஸ்’ சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதினை பெற்றது.

‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற திரைப்படம். மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் போட்டியிட்ட நிலையில், 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இவையனைத்தையும் உள்ளடக்கி, ஆஸ்கர் விருது மேடையில் வழங்கப்பட்ட விருதுகளையும், அவற்றை வென்ற விருதாளர்களையும் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவிலிருந்து ஆஸ்கர் வென்ற படைப்புகள்: சிறந்த அசல் பாடலுக்கான விருது - ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல். சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருது - தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்(The Elephant Whisperers).

அடுத்தபடியாக ’எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once) திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் விருது பெற்ற விவரம்: சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதுகளை இயக்குநர் சகோதரர்களான டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் வென்றனர். சிறந்த நடிகை - மிச்செல் யோ, சிறந்த துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ், சிறந்த துணை நடிகர் - கே ஹுய் குவான் ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றனர். மேலும் சிறந்த படம், சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளின் கீழும் இந்த திரைப்படம் ஆஸ்கர் வென்றது.

இதர ஆஸ்கர் விருதாளர்கள்:

’ஆல் க்யொட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’ (All Quiet on the Western Front) திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு (ஜேம்ஸ் ஃப்ரெண்ட்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு(கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர்), சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய விருதுகளை வென்றது.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’(Avatar: The Way of Water) திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட்) விருதினை வென்றது.

’தி வேல்’(The Whale) படத்துக்காக, சிறந்த நடிகருக்கான விருதினை பிரெண்டன் ஃப்ரேசர் பெற்றார். மேலும் இதே திரைப்படம் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான விருதுகளையும் வென்றது.

சிறந்த ஆடை வடிவமைப்பு - ’பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்’(Black Panther: Wakanda Forever) படத்துக்காக ரூத் கார்ட்டர் வென்றார்

சிறந்த தழுவல் திரைக்கதை - ’வுமன் டாக்கிங்’(Women Talking) படத்துக்காக சாரா போலே பெற்றார்.

சிறந்த ஒலி - டாப் கன்: மேவரிக்(Top Gun: Maverick) படத்துக்காக மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர்

சிறந்த அனிமேஷன் படம் - ’கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ’(Guillermo del Toro's Pinocchio)

சிறந்த அனிமேஷன் குறும்படம் - ’தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்’ (The Boy, The Mole, The Fox And The Horse)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ’ஆன் ஐரிஷ் குட்பை’(An Irish Goodbye)

சிறந்த ஆவணப்படம் - ’நவல்னி’(Navalny)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in