ஆஸ்கர் விருது முழு விவரம்

ஆஸ்கர் விருது முழு விவரம்

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

சிறந்த முழு நீள அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை என்கேன்டோ (Encanto) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ‘தி விண்ட்ஷீல்டு வைப்பர்’ (THE WINDSHIELD WIPER) திரைப்படம் தட்டிச் சென்றது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ‘டிரைவ் மை கார்’ (Drive My Car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இதனை யுசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) என்பவர் இயக்கியுள்ளார்.

சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை ENCANTO திரைப்படம் வென்றது.

சியான் ஹிடர் இயக்கிய கோடா (CODA) திரைப்படத்தில் நடித்த நடிகர் ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த காணொளி இணைப்பு விருதை அனேல் கரியா இயக்கிய ‘தி லாங் குட்பாய்’ என்ற குறும்படம் வென்றுள்ளது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டுச் சென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.

க்ருயெல்லா (Cruella) படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை சியான் ஹெடெர் வென்றுள்ளார்.

கோடா படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருதை கென்னத் பிரானா வென்றுள்ளார்.

பெல்பாஸ்ட் படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறந்த ஆவணத்திரைப்படத்துக்கான விருதை சம்மர் ஆஃப் சோல் (SUMMER OF SOUL) திரைப்படம் வென்றுள்ளது.

Related Stories

No stories found.