பிரபல நடிகை இறந்ததால் மனஉளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட தோழி!

மஞ்சுஷா நியோகி
மஞ்சுஷா நியோகி

தனது தோழி நடிகை பிதிஷா டி மஜூம்தார் தற்கொலை செய்து கொண்ட் சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த அவரது தோழியும், நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிதிஷா டி மஜூம்தார்(21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 25-ம் தேதி தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் அந்த நடிகையின் தோழியும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றதுள்ளது.

மேற்கு வங்கம், கொல்கத்தா படோலி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுஷா நியோகி(21). மாடல் அழகியான இவர் தற்கொலை செய்து கொண்ட நடிகை பிதிஷா டி மஜூம்தாரின் நெருங்கிய தோழியாவார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். அத்துடன் பிதிஷாவுடன் இணைந்து தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்தார்.

மஞ்சுஷா நியோகி
மஞ்சுஷா நியோகி

இந்த நிலையில் பிதிஷா தற்கொலை செய்து கொண்டதால் மஞ்சுஷா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 நாட்களுக்குள் நடிகைகள் பல்லவி டே, பிதிஷா, மஞ்சுஷா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in