சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மோசடி!

சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மோசடி!
சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் பிரபல நிறுவனத்திடம் ரூ.2000 கடன் வாங்கியுள்ளார்.

இத்தகவலை தனது சமூக வலைதள பதிவின் மூலம் பகிர்ந்துள்ள சன்னி லியோன், ”சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ.2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த உதவியும் ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த ட்வீட்டை வைரல் செய்த நிலையில், சன்னி லியோன் அந்த பதிவை நீக்கியதோடு, இந்த பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பிரச்சினையை விரைவாக சரி செய்ததற்கும், இனி நடக்காது என உறுதி அளித்ததற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.