நடிகர் ஆனார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்!

எஸ்.ஆர்.ஜாங்கிட்
எஸ்.ஆர்.ஜாங்கிட்

முன்னாள் டிஜிபி ஜாங்கிட், ’குலசாமி’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

எம்.ஐ.கே. புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிக்கும் படம், குலசாமி. இதை, ’குட்டிப்புலி’ ஷரவண ஷக்தி இயக்குகிறார். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

எஸ்.ஆர்.ஜாங்கிட்
எஸ்.ஆர்.ஜாங்கிட்

இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். முன்னாள் டிஜிபியான ஜாங்கிட், பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தவர். அந்தக் கதைதான், ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமாக வெளியானது. பல்வேறு முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர் ஜாங்கிட்.

’குலசாமி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in