`30 நாட்கள், 720 மணி நேரம் செலவழித்தார்'- 292 முறை படம் பார்த்து ரசிகர் கின்னஸ் சாதனை

`30 நாட்கள், 720 மணி நேரம் செலவழித்தார்'- 292 முறை படம் பார்த்து ரசிகர் கின்னஸ் சாதனை

’ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்’ படத்தை அதிக முறைப் பார்த்து கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார், இளைஞர் ஒருவர்.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உண்டு. ஆக்‌ஷன் படங்களை விரும்பும் ரசிகர்கள், ஸ்பைடர்மேன் போன்ற படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பது வழக்கம். இதுபோன்ற படங்கள் சிறுவர்களுக்கும் பிடிக்கும். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு வெளியான, ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (Spider-Man : No Way Home) படமும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை 292 முறை திரையரங்கில் பார்த்து கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார் வெறித்தன ரசிகர் ஒருவர்.

அந்த ரசிகர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அலானிஸ். கடந்த டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதிவரை இந்தப் படத்தை திரையரங்குக்குச் சென்று பார்த்துள்ளார். கணக்குப்படி இந்தப் படம் பார்ப்பதற்காக, 30 நாட்கள், 720 மணி நேரம் செலவழித்திருக்கிறார். டிக்கெட்டுக்காக மட்டும் இந்திய ரூபாய்க்கு சுமார் 2.59 லட்சத்தை செலவழித்திருக்கிறார்.

அலானிஸ்
அலானிஸ்

ஏன் இப்படி? கடந்த 2019-ம் ஆண்டு, ’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தை 191 முறைப் பார்த்து கின்னஸ் சாதனைப் படைத்திருந்தார், அலானிஸ். இந்தச் சாதனையை அர்னாட் கிளீன் என்பவர் காமிலாட் (Kaamelott) என்ற படத்தை 204 முறைப் பார்த்து முறியடித்து விட்டாராம். அதனால், ஏமாற்றமடைந்தார் அலானிஸ். அதோடு 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனையை பெறும் முன்பே, அவருக்கு ஆதரவாக இருந்த பாட்டி மறைந்து விட்டார். அவர் நினைவாக அந்த கின்னஸ் சாதனையை மீண்டும் பெற முடிவு செய்தார். அதன்படி 292 முறை இந்தப் படத்தைப் பார்த்து சாதித்திருக்கிறார், அலானிஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in