'உடலை காரணமாக வைத்து நிராகரிக்கக்கூடாது': சொல்கிறார் பிரபல நடிகை!

புளோரா சைனி
புளோரா சைனி

குண்டாக இருப்பதாகக் கூறியே பல படங்களில் நிராகரித்தார்கள் என்று பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'கஜேந்திரா', 'குஸ்தி', 'திண்டுக்கல் சாரதி', 'நானே என்னுள் இல்லை' உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகை புளோரா சைனி. சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர், குண்டாக இருப்பதாகக் கூறி பாலிவுட்டில் தன்னை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், " தென்னிந்திய சினிமாவில் எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து நடித்து வந்தேன். கொஞ்சம் குண்டாக இருக்கும் நடிகைகளையே தென்னிந்திய சினிமாவில் விரும்புவார்கள். ஆனால், பாலிவுட்டில் எனக்கு வேறு அனுபவம் ஏற்பட்டது. நான் மும்பையில் ஆடிசன்களில் பங்கேற்றபோது நிராகரிக்கப்பட்டேன். ’உங்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறது, கேரக்டருக்கு பொருந்தமாட்டீர்கள்’ என்றே என்னை நிராகரித்தார்கள். பலமுறை இப்படி நிராகரிக்கப்பட்டேன்" என்று கூறினார்.

"இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும். இதனால் சாப்பாட்டின் மீது எனக்கு வெறுப்பும் காதலும் இருந்தது. அப்போது நான் பட்ட கஷ்டத்தைச் சொல்ல முடியாது. உடல் இளைக்க முயன்றேன். பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன். அது எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால், பிறகுதான் அதை பின்பற்றத் தேவையில்லை என்று உணர்ந்தேன். உடலை காரணமாக வைத்து சினிமாவில் நடிகைகளை நிராகரிக்கக் கூடாது என்பது என் கருத்து.

இவ்வாறு புளோரா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in