5 நிமிடம் பட்டாசு வெடிக்கும் காசில் ஏழைகளின் வயிறு நிறைய அன்னதானம் செய்யலாம்: நடிகர் விஷால் வேண்டுகோள்

5 நிமிடம் பட்டாசு வெடிக்கும் காசில் ஏழைகளின் வயிறு நிறைய அன்னதானம் செய்யலாம்: நடிகர் விஷால் வேண்டுகோள்

ஆந்திரா மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடிகர் விஷால் இன்று வழிபாடு நடத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு பல நாட்களாக வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், வர முடியவில்லை. முதல் முறையாக தற்போது வந்துள்ளேன்.

கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். அவ்வாறு வரும் போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அந்த எனர்ஜி தற்போது கடப்பா தர்காவில் தரிசனம் செய்த போது எனக்கு முழு அளவில் கிடைத்ததாக உணர்வு ஏற்பட்டுள்ளது" என்றார்.

மேலும்," நான் அல்லாவையும், வெங்கடேஸ்வர சுவாமியும் இயேசுவையும் வழிபடுவேன். எனக்கு மதம் என்ற பிரிவினை கிடையாது. நான் அனைத்து மதக்கடவுளையும் மதிக்க கூடியவன். தீபாவளி பண்டிகைக்காக அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஜாக்கிரதையாக பட்டாசு வெடிக்க வேண்டும். ஆனால், பட்டாசு வெடிக்காமல் ஏழைகளுக்கு உதவியும் செய்யலாம். ஐந்து நிமிடம் பட்டாசு வெடிக்கும் காசில் ஏழைகளின் வயிறு நிறைய அன்னதானம் செய்தால் மிகவும் புண்ணியம் கிடைக்கும். யாராக இருந்தாலும் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in