காதலர் தினம் அன்று முதல் பாடல் வெளியீடு!‍ - `பீஸ்ட்' படத்தின் புதிய அப்டேட்

காதலர் தினம் அன்று முதல் பாடல் வெளியீடு!‍ - `பீஸ்ட்' படத்தின் புதிய அப்டேட்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள `பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் `பீஸ்ட்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘பீஸ்ட்' திரைப்படத்தின் முதல் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in