ஆட்டம் போட வைக்கும் பிம்பிலிக்கி பிலாப்பி: 'பிரின்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஆட்டம் போட வைக்கும்  பிம்பிலிக்கி பிலாப்பி:  'பிரின்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்திலிருந்து 'பிம்பிலிக்கி பிலாப்பி' பாடல் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்', 'டான்', ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது கைவசம் 'பிரின்ஸ்', 'அயலான்', 'மாவீரன்' ஆகிய படங்கள் உள்ளன. இதில் 'பிரின்ஸ்' மற்றும்' அயலான்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான, 'பிம்பிலிக்கி பிலாப்பி' இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியாகியுள்ள இந்த 'பிம்பிலிக்கி பிலாப்பி' பாடல் ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடும் விதத்தில் உள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து ரம்யா பெஹாரா மற்றும் சஹிதி சகந்தி ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in