ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த படம் 'அன்பறிவு'. இப்படத்தில் இரட்டை வேடத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருந்தார். இதனையடுத்து அவர் நடித்த 'வீரன்'திரைப்படம் இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு' PT Sir' என்று பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார்.

மேலும் பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த், காஷ்மிரா பரதேசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in