கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என 4 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். ’ஜோக்கர்’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - ராஜூ முருகன்’ கூட்டணி கார்த்தி நடிக்கும் ஜப்பானுக்காக மீண்டும் இணைந்துள்ளது.

கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பானில்’ ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை பார்த்துக்கொள்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சி வழங்குகிறார். ஜப்பான் திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருமென தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in