கேன்ஸ் விழாவில் பா.ரஞ்சித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கேன்ஸ் விழாவில் பா.ரஞ்சித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில், பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இயக்குநர் பா.ரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாள ராகவும் இருக்கிறார். தனது நீலம் புரொடக் ஷன்ஸ் மூலம் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.

இந்நிலையில், பா.ரஞ்சித், ‘நீலம் ஸ்டுடியோ’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் . இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து ’வேட்டுவம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது .

இந் நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் கலந்துகொண்டனர்.

கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாக இருக்கும் இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in