சிம்பு படத்தில் அறிமுகமாகும் மலையாள நடிகர்

சிம்பு படத்தில் அறிமுகமாகும் மலையாள நடிகர்
’வெந்து தணிந்தது காடு’- சிம்பு, நீரஜ் மாதவ்

சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் தமிழில் அறிமுகமாகிறார்.

’மாநாடு’ பட வெற்றியை அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

நடிகை ராதிகா, சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

’வெந்து தணிந்தது காடு’- சிம்பு, நீரஜ் மாதவ்
’வெந்து தணிந்தது காடு’- சிம்பு, நீரஜ் மாதவ்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அவர் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நீரஜ் மாதவ், தி ஃபேமிலிமேன் வெப் தொடரிலும் நடித்திருந்தார். இந்நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நீரஜ் மாதவின் தோற்றத்தைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஸ்ரீதரன் என்ற கேரக்டரில் நீரஜ் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in