நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நிவின் பாலி, நஸ்ரியா நடித்த 'நேரம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்திலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கி வரும் படம், ’கோல்டு’.

இதில் பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மற்றும் அஜம்ல் அமீர், லாலு அலெக்ஸ், மல்லிகா சுகுமாறன், ஷம்மி திலகன், பாபுராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை பிருத்விராஜ் புரொடக் ஷன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் இடம்பெற்றுள்ளது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in