‘இந்தியன் 2’ படத்தின் அறிமுகம் எப்போது... வெளியானது முக்கிய அப்டேட்!

இந்தியன் 2 பட போஸ்டர்
இந்தியன் 2 பட போஸ்டர்

இந்தியன் 2 படம் குறித்து சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான போஸ்டர் ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. மாபெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இத்திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன அவற்றை இயக்குநர் ஷங்கர் படமாக்கினார்.

இந்தியன் 2
இந்தியன் 2

தற்போது சித்தார்த் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் காட்சிகளை மட்டும் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக உருவெடுத்த சிம்பு தேவன், அறிவழகன், வசந்தபாலன் உள்ளிட்டோர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. பல பிரச்சினைகள் காரணமாக ‘இந்தியன் 2’ திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

கமல், ஷங்கர்
கமல், ஷங்கர்

’இந்தியன் 2’ படத்திற்கான அறிமுக காட்சிகள் நவம்பர் 3ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in