முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: பர்ஸ்ட் லுக் வெளியீடு!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: பர்ஸ்ட் லுக் வெளியீடு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மெயின் அடல் ஹூன்' படத்தின் பர்ஸ்ட் லுக்கினை நடிகர் பங்கஜ் திரிபாதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அவரின் வாழ்க்கை வரலாறு படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களில், வாஜ்பாய் ஒரு பிரதமர், கவிஞர், அரசியல்வாதி மற்றும் ஜென்டில்மேன் என சித்தரிக்கிறது. இந்த படத்தில் வாஜ்பாய் வேடத்தில் நடிக்கும் பங்கஜ் திரிபாதி, வேட்டி-குர்தா ஆடை அணிந்துள்ளார்.

இது தொடர்பாக பங்கஜ் திரிபாதி தனது பதிவில், “ அடல்ஜியின் ஆளுமையை திரையில் நிஜமாக்க, எனது ஆளுமையில் நிதானத்துடன் பணியாற்றுவது அவசியம் என்பதை நான் அறிவேன். உற்சாகத்துடனும், மன உறுதியுடனும் இதனை வழங்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார். வாஜ்பாயின் வேடத்தில் நடிகர் பங்கஜைப் பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டனர்.

இத்திரைப்படம் டிசம்பர் 25, 2023 ல் வெளியாகும். இப்படத்தின் கதையை உத்கர்ஷ் நைதானி எழுதியுள்ளார், மூன்று முறை தேசியவிருது பெற்ற ரவி ஜாதவ் படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கு இசை இரட்டையர்களான சலீம்-சுலைமான் இசையமைக்கவுள்ளனர். இந்த வீடியோ அறிவிப்புக்கு பாடகர் சோனு நிகம் குரல் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in