அலறி அடித்துக்கொண்டு தெருவிற்கு ஓடி வந்த நடிகை கனகா: வீட்டிற்குள் பற்றி எரிந்த தீ

நடிகை கனகா
நடிகை கனகா

சென்னையில் நடிகை கனகா வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை புரம் முதலாவது மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் நடிகை கனகா. பழம் பெரும் நடிகையான தேவிகாவின் மகளான கனகா தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'கும்பக்கரை தங்கய்யா', 'தாலாட்டு கேக்குதம்மா', 'சாமுண்டி', 'கோயில் காளை', 'சக்கரை தேவன்', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளர்ர.

இவர் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், சரத்குமார், மம்முட்டி உள்பட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்பட பல மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை நடிகை கனகா வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது. பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் தீ பரவியது. இதனால் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அவரது வீட்டில் கரும்புகை சூழ்ந்தது.

இதனால் அலறி அடித்து கொண்டு வெளியே வந்த நடிகை கனகா, இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் மைலாப்பூர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் வீட்டில் இருந்த துணிகள் எரிந்து சேதமடைந்தன. மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விசாரணை நடத்த சென்ற அபிராமபுரம் போலீஸாரை நடிகை கனகா வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸ் வெளியே இருந்து விசாரணை நடத்திவிட்டு திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in