போக்சோ சட்டத்தின்கீழ் இயக்குநர் மீது வழக்குப் பதிவு

மகேஷ் மஞ்சரேக்கர்
மகேஷ் மஞ்சரேக்கர்

பிரபல நடிகரும் இயக்குநருமான மகேஷ் மஞ்சரேக்கர் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில், அஜித்தின் ’ஆரம்பம்’, சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’, பிரபாஸின் ’சாஹோ’ படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகர் மகேஷ் மஞ்சரேகர். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர், தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

மகேஷ் மஞ்சரேக்கர்
மகேஷ் மஞ்சரேக்கர்

இவர், ’நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ (Nay Varan Bhat Loncha Kon Nay Koncha) என்ற மராத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. இதன் டிரெய்லர் வெளியானபோது, பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதாகவும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மகளிர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து யூடியூபில் இருந்து டிரெய்லர் நீக்கப்பட்டது.

இந்நிலையில், ஷத்திரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பு, பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் இயக்குநர் மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து மும்பை மாஹிம் போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்துவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in