டிஜிட்டல் உலகின் ஆபத்துகளைச் சொல்லும் ’ஃபிங்கர்டிப்-2’

டிஜிட்டல் உலகின் ஆபத்துகளைச் சொல்லும் ’ஃபிங்கர்டிப்-2’

பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ’ஃபிங்கர்டிப்’ தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

ஜீ5 தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர் ’ஃபிங்கர்டிப்’. இதைத் தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. இதில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து, ஹரிணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசன்னா
பிரசன்னா

ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசன், க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது.

ஃபிங்கர்டிப் சீசன் 2 , 6 கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சிலர் வேட்டையாடுபவர்கள் மற்றும் சிலர் டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

ரெஜினா
ரெஜினா

ஷிவாவகர் ஸ்ரீனிவாசன், இதை இயக்கியுள்ளார், பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, தீனதயாளன் இசை அமைத்துள்ளார். ஃபிலிம் குரு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண் குமார், ஜார்ஜ் சி வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர்.

இதுபற்றி, ஜீ என்டர்டெயின்மென்ட் தலைமை அதிகாரி, சிஜு பிரபாகரன் கூறும்போது, ஃபிங்கர்டிப் சீசன் 2 நம்மையும் டிஜிட்டல் உலகத்தையும் சுற்றிப் பின்னப்பட்ட கதை, சுவாரஸ்யமான வகையில் சொல்லும் டெக் த்ரில்லர் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in