'காந்தாரா’ படம் குறித்து கருத்து சொன்ன அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

'காந்தாரா’ படம் குறித்து கருத்து சொன்ன அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

‘காந்தாரா’ படம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாகி வசூல் ரீதியாகவும்., விமர்சன ரீதியாகவும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக வசூலைப் பெற்றுள்ளது .

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் படத்தை பார்த்து விட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’ 'காந்தாரா’ படத்தை நலன் விரும்பிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் நான் பெங்களூருவில் பார்த்தேன். துளுவநாடு மற்றும் காரவல்லியின் பாரம்பரியத்தை சிறப்பாக படமாக்கியுள்ளனர்" என ட்விட்டிலும், தொலைபேசி வாயிலாகவும் ரிஷப் ஷெட்டியைப் பாராட்டியுள்ளார் நிர்மலா சீதாராமன். இந்தப் புகைப்படங்களையும் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in