உச்ச நட்சத்திரங்களை உருவாக்கியவர்: தயாரிப்பாளர் ராஜ்கண்ணு இறுதிச்சடங்கில் சினிமாக்காரர்கள் மிஸ்ஸிங்!

உச்ச நட்சத்திரங்களை உருவாக்கியவர்: தயாரிப்பாளர் ராஜ்கண்ணு இறுதிச்சடங்கில் சினிமாக்காரர்கள் மிஸ்ஸிங்!

பல உச்ச நட்சத்திரங்களை உருவாக்கிய தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் இறுதிச்சடங்கில் சினிமாக்காரர்கள் யாரும் பங்கேற்றவில்லை என்ற தகவல் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவை சினிமாவில் யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர் தயாரித்த பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப் பருவத்திலே, மகாநதி போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட். ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் ராஜ்கண்ணு தயாரிப்பில் நடித்தவர்கள். இயக்குநர் பாரதிராஜாவை சினிமா உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் பதினாறு வயதினிலே. ஏராளமான படங்களை தயாரித்துள்ள அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா, என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளி ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பில் ஈடுபட முடியாத அளவிற்கு நலிந்திருந்துபோனார் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் "மகாநதி' படத்தைத் தயாரித்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெறவில்லை. மேலும், நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்துக்குப் பூஜை போட்டார். அந்தப் படம் பூஜையோடு நின்று போனது. அதே நேரத்தில் தம்மை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற அக்கறையில் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு சில காலம் ராடன் டி.வி.யில் ஒரு பொறுப்பு கொடுத்து ஊதியமும் கொடுத்து வந்தார் நடிகை ராதிகா. பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேஷ் போன்ற சில அவருடைய அறிமுகங்கள் உதவியோடு செங்கல்பட்டுக்குத் தெற்கே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் ராஜ்கண்ணு.

இந்தநிலையில் வீட்டின் குளியல் அறையில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தவறி விழுந்து, கை, காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இதில் சோகமாக சம்பவம் என்னவென்றால் இவரது இறுதி ஊர்வலகத்தில் வெறும் 20 பேர் மட்டுமே பங்கேற்றதுதான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ராதிகா போன்ற நட்சத்திரங்களை உருவாக்கிய இவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள், உறவினர்களை தவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் உட்பட சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சார்ந்தோர் யாரும் அஞ்சலி செலுத்த வராதது வேதனைக்குரியதாகும்.

சினிமாவிலும், அரசியலிலும் "பவர்" இருக்கும் வரை தான் ஒரு மனிதருக்கு மரியாதை என்பது இந்த சம்பவமே ஓர் உதாரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in