`சூரரைப் போற்று’ தயாரிப்பாளருக்குத் திருமண நிச்சயதார்த்தம்!

`சூரரைப் போற்று’ தயாரிப்பாளருக்குத் திருமண நிச்சயதார்த்தம்!
சன்னி கபூர், குனீத் மோங்கா

’சூரரைப் போற்று’ படத்தை நடிகர் சூர்யாவுடன் இணைந்து தயாரித்த குனீத் மோங்காவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிரபல இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. இவர் தனது சிக்யா என்டர்டெயின்மென்ட் (Sikhya Entertainment) நிறுவனம் சார்பில், ரங்க ரஸியா, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை, சைத்தான், கேங்ஸ் ஆப் வாஸிபுர், லஞ்ச் பாக்ஸ் உட்பட பல்வேறு இந்திப் படங்களைத் தயாரித்துள்ளார். லவ், ரிங்கிள் ஃபிரீ (Love, Wrinkle-free) என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழில், ’சூரரைப் போற்று’ படத்தை சூர்யாவுடன் இணைந்து தயாரித்தவர் இவர். இவரும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சன்னி கபூரும் காதலித்து வந்தனர்.

சன்னி கபூர், குனீத் மோங்கா
சன்னி கபூர், குனீத் மோங்கா

இப்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்தம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், சில நேரங்களில் தவறான ரயில், சரியான ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லும். அங்குதான் என் வாழ்க்கைத் துணையான சன்னி கபூரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ’அம்மா தனது நிச்சயதார்த்தத்தின் போது அணிந்திருந்த புடவையை இப்போது அணிந்திருப்பதன் மூலம் அம்மா, அப்பா ஆசிர்வாதங்களை உணர்கிறேன்’ என்று இந்த 38 வயது தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.