துணி எடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது: 4-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இயக்குநர் பலி

துணி எடுத்தபோது மின்சாரம் பாய்ந்தது: 4-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இயக்குநர் பலி

மின்சாரம் தாக்கியதால், நான்காவது மாடியில் இருந்து விழுந்த திரைப்பட இயக்குநர் உயிரிழந்தார்.

தெலுங்கில் ’ரூல்’ என்ற படத்தை இயக்கியவர் பைடி ரமேஷ். சோனா படேல், சிவமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால், போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அடுத்தப் படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

ஹைதராபாத்தில், நான்கு மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார் பைடி ரமேஷ். சில நாட்களுக்கு முன் திடீரென்று மழை பெய்தது. இதனால் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக அங்குச் சென்றார். அப்போது அடித்த காற்றில், சில துணிகள் மின் கம்பத்தில் விழுந்தன.

அதைக் கவனிக்காமல் இரும்பு கம்பியால் துணிகளை எடுக்க முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டார். நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இளம் இயக்குநர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in