படப்பிடிப்பு தளத்திற்கு சீல்: விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் மாற்றம்!

படப்பிடிப்பு தளத்திற்கு சீல்:  விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் மாற்றம்!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ பட சூட்டிங் ஸ்பாட் மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் நடிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு மும்பை அந்தேரியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சித்ரகூட் படப்பிடிப்புத் தளத்துக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப் பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட் கலைக்கப்பட்டது. இதனால் இதன் படத்திற்கு மும்பையில் உள்ள பிருந்தாவன் ஸ்டுடியோவில் நடக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தவ்ராணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in