ஒளிப்பதிவாளருக்கு கரோனா; ’சர்தார்’ படப்பிடிப்பு நிறுத்தம்

ஒளிப்பதிவாளருக்கு கரோனா; ’சர்தார்’ படப்பிடிப்பு நிறுத்தம்
’சர்தார்’ கார்த்தி

ஒளிப்பதிவாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், ‘சர்தார்’. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சிம்ரன், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இதைத் தயாரித்து வருகிறது.

ஒளிப்பதிவாளர்  ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்

இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. படத்தில் அப்பா, மகனாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸுக்கு உடல்நிலைப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஒளிப்பதிவாளருடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.