நடிகர் சிம்புவின் `பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

 ‘பத்துதல’
‘பத்துதல’ நடிகர் சிம்புவின் `பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படத்தில் நடித்துள்ளார். பிரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இந்தமாத இறுதியில் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இதன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழு படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று சென்னையில் நடக்க இருப்பதைத் தெரிவித்தனர்.

மேலும், படத்தின் பேட்ச் வொர்க் பணிகள் மற்றும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அப்போது நடந்த வந்த நிலையில் அந்த பணிகள் நிறைவடைந்ததையும் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதையும் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர். என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு மணல் மாஃபியா கிங்காக நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘மஃப்டி’ படத்தை அப்படியே எடுக்காமல் கதையின் கருவை எடுத்துக் கொண்டு ‘பத்துதல’ படத்தை வேறாக படமாக்கி இருப்பதாக இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in