பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரையுலகினர்  அஞ்சலி!

ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.

இவர் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உள்ளிட்ட படங்களையும் தயாரித்தவர். கடந்த சில மாதங்களாக திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு உதவ வேண்டும் என்ற அவர் குறித்த வீடியோ கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பிரபலங்கள் உதவினர்.

முன்னதாக மருத்துவமனையிலும் அதனைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திலும் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள். அவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.

வி.ஏ.துரைக்கு சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது. அதன்பிறகு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

HBD Sathyaraj: ‘சிவாஜி’யின் நிறைவேறாத ஆசை... திரையில் வாழ்ந்து காட்டிய சத்யராஜ்!

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை!

நாடு முழுவதும் அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!

உஷார்... சூப்பர் மார்க்கெட்டில் ஃபிரிட்ஜை திறந்து சாக்லேட் எடுத்த சிறுமி... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in