தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்

 தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் எம்.முத்துராமன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

துரை இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜயகுமார் நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’, பிரபு - ரேகா நடித்த மூடு மந்திரம், சிவாஜி - கார்த்திக் நடித்த ராஜமரியாதை உட்பட சுமார் 26 திரைப்படங்களை தயாரித்தவர் எம்.முத்துராமன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று அதிகாலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவர் இல்லத்தில் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் நடக்கிறது.

மறைந்த எம்.முத்துராமனுக்கு சுமங்கலி என்ற மனைவியும் அனு என்ற மகளும் உள்ளனர். எம்.முத்துராமன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in