'சித்து மூஸ்வாலாவிற்கு ஏற்பட்ட கதி உங்களுக்கும் ஏற்படும்': பிரபல தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்

'சித்து மூஸ்வாலாவிற்கு ஏற்பட்ட கதி உங்களுக்கும் ஏற்படும்': பிரபல தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்

பஞ்சாப் பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டதை போல உங்களையும் கொல்வோம் என பிரபல தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா, கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட மறுநாளே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரைப் போலவே உங்களையும் கொல்வோம் என்று பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் 'சர்ப்ஜித்', 'அலிகார்', 'நரேந்திரமோடி', 'ஜுண்ட்' உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சந்தீப் சிங். இப்போது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயோபிக்கை தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய பேஸ்புக் பக்கத்தில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டது போல நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டதை அடுத்து மும்பை அம்போலி காவல் நிலையத்தில் சந்தீப் சிங் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்தி நடிகர் சல்மான் கான், அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in