திரைத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்…ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்: இயக்குநர் நெல்சன் அப்செட்

திரைத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்…ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்: இயக்குநர் நெல்சன் அப்செட்

ஹைதராபாத்தில் திரைத்துறையினர் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் ஆகஸ்ட் மாதம் துவங்க இருந்த ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இயக்குநர் நெல்சன் அப்செட்டாகியுள்ளார்.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் செட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக நெல்சன் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதன் காரணமாக ரஜினி படம் டிராப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த நிலையில், நெல்சன் இயக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘ஜெயிலர்’ என்ற டைட்டிலும் வெளியானது. இந்த படத்திற்காக தனக்கு 3 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஓய்வு வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் கதை, திரைக்கதை அமைப்பு பணியில் நெல்சன் ஈடுபட்டிருந்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங் செல்லலாம் என நெல்சன் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஹைதராபாத்தில் திரைத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் இயக்குநர் நெல்சன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஹைதாராபாத் திரையங்குகளில் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடிகர்கள், இயக்குநர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்றும், திரையரங்கு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் அறிவித்துள்ள வேலைநிறுத்தம், நெல்சனின் ‘ஜெயிலர்’ படத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in