ராமேஸ்வரம் கோயிலில் சினிமா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் 
இயக்குநரும், நடிகருமான 
எஸ்ஏ.சந்திரசேகர்
ராமேஸ்வரம் கோயிலில் இயக்குநரும், நடிகருமான எஸ்ஏ.சந்திரசேகர் ராமேஸ்வரம் கோயிலில் சினிமா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம்
Updated on
1 min read

சினிமா இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ராமேஸ்வரம் கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

நடிகர் விஜய்காந்தை வைத்து 19 திரைப்படங்கள், நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து 'நான் சிகப்பு மனிதன்', நடிகர்கள் அர்ஜூன், சிவக்குமார், சரத்குமார், அருண் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு திரை உலகில் பல்வேறு வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அரசியல், சமூக சிந்தனை, சட்டம் சார்ந்த இவரது பெரும்பாலான படங்களில் கதாநாயகர்களின் இளம் வயது கேரக்டர்களில் தனது மகனை விஜயை பெரிதும் நடிக்க வைத்தார். இதன்பின்னர் விஜயை கதாநாயகனாக வைத்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.

நாளடைவில் சந்திரசேகரும் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் முகம் காட்ட துவங்கி பின்னர் முழு நேர நடிகரானார். விஜய் ரசிகர் மன்றங்களைக் கொண்டு அரசியல் களத்தில் இறங்க முயன்றதால் தந்தை, மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இவரது இயக்கத்தில் உருவான 'நான் கடவுள் இல்லை' திரைப்படம் பிப்.3-ம் தேதி வெளியானது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சந்திரசேகர் இன்று காலை தரிசனம் செய்தார். கும்பம் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். குடும்ப நலன் வேண்டி ராமநாதசுவாமியை கும்பிட வந்ததாக அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in