'லியோ' படம் பார்க்க தியேட்டருக்கு வந்த பிரபல நடிகை... ரசிகர்கள் தள்ளு முள்ளு!

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  இன்று காலை 9 மணிக்கு அதன் முதல் காட்சிகள் தொடங்கின.  இந்த நிலையில் அந்த படத்தை பார்க்க திரை உலக பிரமுகர்கள் பலரும் ஆர்வமுடன் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.

பொதுவாக பிரபலங்களின் படங்கள் என்றால் அதிகாலையில் ரசிகர் காட்சி இடம் பெறும்.  அந்த ரசிகர் காட்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் அவர்களுடன் அமர்ந்து படம் பார்க்க அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள்  உள்ளிட்டவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். 

ஆனால், 'லியோ' படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு காலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது.  நீதிமன்றம் வரை சென்று பயன் ஏதுமில்லை என்பதால் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

சென்னை  குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண்பதற்காக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,  இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில்  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வந்தார்.

அடுத்ததாக ரசிகர்களின் கனவு கன்னியான  கீர்த்தி சுரேஷ்  படம் பார்க்க வந்தார். அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் ரசிகர்கள் கூட்டத்தால்  வெற்றி திரையரங்க வளாகமே திருவிழா கோலத்துடன் காட்சி அளித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in